சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வழிகள்:
            
            சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் சங்கம் இயற்றும் பணிகள்:
            
            
                - சொற்பொழிவுகளும்
                    (Lectures) சொற்போர்களும் (Debates) நடத்துதல்.
 
                - தக்க ஆசிரியர்களைக்
                    கொண்டு போதனை வகுப்புகள் (Tuition Classes) நடத்துதல்.
 
                -  நூல்வெளியீடு, நாளிதழ்,
                    திங்களிதழ் வெளியீடு முதலியன செய்தல்.
 
                - தமிழ் நூல்
                    ஆராய்ச்சிகள், தமிழர் நாகரீகம் பற்றிய ஆராய்ச்சிகள் இலக்கண இலக்கிய அறிவு நூல் முதலிய பிற மொழி
                    நூல்களையும் தமிழில் உருவாக்குதல், வெளியிடுதல்.
 
                - கைத்தொழில் கலாசாலைகள்
                    அமைத்து நடத்துதல், அதாவது தொழிற்கல்வி பயிற்சி நிலையம் (I.T.I) பல்தொழில் நுணுக்கப்பள்ளி (Poly
                    Technique)பொறியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி,
                    சட்டக் கல்லூரி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியப் பயிற்சி நிலையம் மற்றும் உடற்கல்வி பயிற்சி
                    நிலையம் போன்ற நிறுவனங்களை நிறுவி நடத்துதல்.
 
                - கலாசாலைகளில் எளிமை,
                    தூய்மை, விரிந்தமனம், நல்லொழுக்கம் முதலியன மாணவர்களிடம் படியப்பழக்குதல்
 
                - தமிழரின்
                    முன்னேற்றத்திற்கான அறநிலையங்கள் கல்வி நிலையங்கள், புகலிடங்கள் (Asylums). அனாதை இல்லங்கள்
                    (Orphanages), ஏழையில்லங்கள் (Poor Houses) மருத்துவச் சாலைகள் முதலியன நடத்துதல்.
 
                - சங்கத்தின் நோக்கங்களை
                    நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகள் அனைத்தையும் செய்வதுடன் மாநாடுகள். பொதுக் கூட்டங்கள் நடத்துதல், மேலும்
                    முக்கியமான தொண்டுகளைப் புரிதல்.