-
கரந்தை தமிழ்ச் சங்கம் உருவானதால் தோன்றிய கரந்தை தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்கள்:
- 1916 ஆம் ஆண்டு சங்கம் நிறுவிய துங்கன திரு. த. வே இராதாகிருட்டிணப்பிள்ளை அவர்களின்
திருப்பெயரால் தொடங்கப் பெற்ற பள்ளியாகும்.
-
உமாமகேசுவர மேல்நிலைப்பள்ளி:
- சங்கம் தொடங்கிய நாள் தொடங்கி முப்பதாண்டுகள் சங்கத்தின் முதற்றலைவராக, ஒப்பில்லாப் பணியாற்றிய
தமிழ்வேள் அவர்களின் நிலைவினைப் போற்றும் வகையில், அவர் மறைந்த ஆண்டாகிய 1941 ஆம் ஆண்டு
உமாமகேசுவர நடுத்தரப் பள்ளி தொடங்கப் பெற்றது. 1950 ஆம் ஆண்டில் உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளியாக
உயர்ந்து, 1978 ஆம் ஆண்டு முதல் உமாமகேகரை மேனிலைப் பள்ளியாக மேனிளை அடைந்து களிவிப் பணியாற்றி
வருகிறது.
-
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி:
- தமிழ்த் தாயின் அருள் நலத்தால், தமிழவேள் அவர்களின் அயரா முயற்சியால் 1938 ஆம் ஆண்டு தொடங்கப்
பெற்றது. "கரந்தைப் புலவர் கல்லூரி" ஆகும். இக்கல்லூரியானது 1987 ஆண் ஆண்டு முதல் தமிழவேள்
உமாமகேசுவரனார் கரத்தைக் கலைக் கல்லூரியாக சீரிய கல்விப் பணியாற்றி வருகின்றது.
-
தி.ச. பழனிச்சாமி பிள்ளை தொழிற் பயிற்சி மையம்:
- மாணவர்கள் ஏட்டுக் கல்வியோடு தொழிற் கல்வியும் பெற்று உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில்
1992 ஆம் பண்டு நி.ச. பழனிச்சாமி பிள்ளை பயிற்சி மையம் தொடங்கப் பெற்றது.
-
உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்:
- 2004-2005 ஆம் ஆண்டில், மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் தொடங்கப் பெற்றது
உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் தற்சமயம் 200 மாணவ, மாணவியர்
ஆசிரியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
-
உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரி:
- 2005 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன், பாரதிதாசன் பல்கலைக் கழக இசைவுடன்
தொடங்கப் பெற்றது உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரியாகும்.
-
உமாமகேசுவரனார் நினைவு அஞ்சல் தலை:
- கரந்தைத் தமிழ்ச் சங்கம், கடந்த 95 ஆண்டுகளாக தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஆற்றிவரும்
பணிகளைப் பாராட்டும் வகையில், சங்கத்தின் முதல் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனர் அவர்களின்
திருவரு தாங்கிய அஞ்சல் தலையினை, மத்திய அரசானது, 18.2.2006 அன்று வெளியிட்டு சிறப்பித்துள்ளது.