Back to English Version

குறிக்கோள்

எதிர்கால இலச்சியம்:

தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார், தம் காலத்தில், தமிழ் வளர்ச்சிக்கு குறித்தும். தமிழர் வாழ்வு நிலை குறித்தும் கண்ட பல கனவுகள் இன்று நிறைவேறியுள்ளன.

தமிழவேள் அவர்கள் கரந்தைக் தமிழ்ச் சங்கத்தை, ஒரு பல்கலைக் கழகமாய் உயர்த்திட எண்ணம் கொண்டு, தாகூரின் சாந்தி நிகேதனைக் காணச் சென்றபொழுது, அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் எனும் சிற்றூரில் உடல் நலம் குன்றி சிவனடி சேர்ந்தார்.

தமிழவேளின் இறுதி ஆசையினை நிறைவேற்றும் பொருட்டு, இன்றைய செயலாளர் செம்மொழிவேளிர் ச. இராமசாதன் அவர்கள், அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றார். தமிழவேள் அவர்களின் ஆசியடனும், செயலாளர் செம்மொழிவேளிர் ச. இராமநாதன் அவர்களின் செயல்திறத்தாலும், உலககெங்கிலும் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்க முன்னாள் மாணவர்கள், தமிழன்பர்கள் அனைவரின் உதவியாலும், சங்க நூற்றாண்டு விழாவின் போது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஒரு பல்கலைக் கழகமாய் மலரும் என உறுதியாக நம்புவோம்.